About Bank
நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி
நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நீலகிரி 1954 ம்ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு பாரத ரிசர்வ் வங்கியிடம் வங்கியியல் உரிமம் (Banking Licence ) பெற்று நீலகிரி மாவட்டம் முழுவதையும் செயல் எல்லைகளாக கொண்டு கடந்த 70 ஆண்டுகளாக நீலகிரி மாவட்ட மக்களின் பொருளாதார நிலையை உயர்த்த சிறந்த வங்கி சேவைஅளித்து வருகிறது.
உதகை நகரின் மையப்பகுதில் தலைமையகமாகக்கொண்டு மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் 21 கிளைகளுடன் வணிக வங்கிகளுக்கு இணையாக சிறந்த சேவை புரிந்து வருகிறது. வங்கியுடன் இணைக்கப்பட்ட 74 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் 3 மலைவாழ் மக்கள் பெரும் பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள், 42 பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள் ,கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மற்றும் கூட்டுறவு பண்டக சாலைகள் என 31.03.2022ன் படி உறுப்பினர் எண்ணிக்கை 306 ஆகும் .